காங்கிரஸின் அனிமேசன் காணொளி: 3 மாநில முதல்வர்கள் கண்டனம்!
Jul 2, 2025, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸின் அனிமேசன் காணொளி: 3 மாநில முதல்வர்கள் கண்டனம்!

வடகிழக்கு மாநிலங்கள் இல்லாத வரைபடம் ஏற்படுத்திய சர்ச்சை!

Web Desk by Web Desk
Sep 19, 2023, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து விட்டு, காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கும் அனிமேசன் காணொளிக்கு, அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 3 மாநில முதல்வர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

சீனா சமீபத்தில் ஒரு வரைப்படத்தை வெளியிட்டது. அந்த வரைப்படத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சிலவற்றை தனது நாட்டின் எல்லைகளாக சித்தரித்திருந்தது. இந்த வரைப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்த நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி தரப்பில் ஒரு அனிமேசன் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த காணொளியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன், ராகுல் காந்தி உரையாடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. மேலும், பின்னணியில் இந்தியாவின் வரைப்படம் காட்டப்படுகிறது. அந்த வரைப்படத்தில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் இத்தகைய செயலுக்கு அஸ்ஸாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரேதச மாநிலங்களின் முதல்வர்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். முதலில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாதான் இந்த விவகாரத்தை எழுப்பினார். அனிமேஷன் காணொளியில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் வரைப்படத்தில், வடகிழக்கு மாநிலங்களை ஒதுக்கியதற்காக காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “வடகிழக்கு மாநிலங்கள் முழுவதையும் அண்டை நாட்டிற்கு விற்க காங்கிரஸ் கட்சி ரகசியமாக ஒப்பந்தம் போட்டிருப்பதாகத் தெரிகிறது. இதற்காகவா ராகுல் வெளிநாடு சென்றார்? அல்லது ஷர்ஜீல் இமாமுக்கு கட்சி அங்கீகாரம் அளித்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Seems the Congress party has secretly struck a deal to sell the entire land of North East to some neighbouring country. Is this why Rahul went abroad? Or has the party given membership to Sharjeel Imam? pic.twitter.com/oO9fLp86p8

— Himanta Biswa Sarma (@himantabiswa) September 16, 2023

 

இதைத் தொடர்ந்து, மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கும், காங்கிரஸ் கட்சிக்கு வடகிழக்கு இந்தியா ஒருபோதும் இருந்ததில்லை என்று கடுமையாக சாடி இருக்கிறார். இதுகுறித்து பைரேன் சிங் நேற்று இரவு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “காங்கிரஸ் கட்சிக்கு வடகிழக்கு இந்தியா எப்போதும் இருந்ததில்லை. இந்தப் படம் உண்மையில் இப்பகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் கண்ணோட்டத்தையும், திட்டத்தையும் சித்தரிக்கிறது. இது வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் துண்டிக்கப்பட வேண்டும் அல்லது முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

North East India never existed for the Congress party.

This picture actually depicts the Congress party’s outlook and plan for this region. It either wants the entire area to be cut off or completely destroyed. pic.twitter.com/3Hfe6Vnfwr

— N.Biren Singh (@NBirenSingh) September 16, 2023

அதேபோல, அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வர் பீமா காண்டு, வடகிழக்கு பகுதியில் காங்கிரஸ் கட்சி தனது மோசமான திட்டங்களை ஒருபோதும் வெற்றி கொள்ளாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். இதுகுறித்து பீமா காண்டு தனது எக்ஸ் பக்கத்தில் இன்று வெளியிட்டிருக்கும் பதிவில், “தங்களது மாநிலத்தை அழித்ததற்கும், கொடூரமாக நடத்தியதற்கும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை வடகிழக்கு ஒருபோதும் மன்னிக்காது. தற்போது நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கும் கட்சி வடகிழக்கை இந்தியாவிலிருந்து துண்டிக்க விரும்புகிறது. அதை நாமும் எங்கள் மக்களும் நடக்க விட மாட்டோம். காங்கிரஸின் மோசமான வடிவமைப்பில் ஒருபோதும் வெற்றிபெற முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.

The #NorthEast will never forgive @INCIndia for first ruining and brutalizing it. Now the grand rejected party wants to cut off the North East from India, which we and our people won't let happen. The Congress will never succeed in its nefarious design. pic.twitter.com/wiKUIpbbOx

— Pema Khandu པདྨ་མཁའ་འགྲོ་། (@PemaKhanduBJP) September 17, 2023

Tags: slamsrahul gandhiCongressdistorted indian map3 states chief ministers
ShareTweetSendShare
Previous Post

கொடிமுடி கோகிலம் நினைவு நாள் இன்று !

Next Post

முக்குறுணி விநாயகருக்கு 18 படி மெகா கொழுக்கட்டை!

Related News

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies