இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்ல இனி விசா தேவை இல்லை என அதிரடியாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கை அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் செல்ல இனி விசா தேவை இல்லை என்றும் இந்தியா மட்டுமின்றி சீனா, மலேசியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கும் விசா தேவை இல்லை என்றும் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தை மார்ச் 31 ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சோதனை முயற்சியில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு நிரந்தரமாக இந்த ஏழு நாடுகளுக்கும் விசா தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் இலங்கை சுற்றுலாத்துறையில் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.