கேலோ இந்திய பாரா விளையாட்டு போட்டிகளுக்கான லோகோ மற்றும் சின்னம் இன்று வெளியிடப்படுகிறது.
கேலோ இந்திய பாரா விளையாட்டு போட்டிகள் வரும் டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறவுள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 1,350க்கும் அதிகமான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
தடகளப் போட்டிகள், துப்பாக்கிச்சூடு, வில்வித்தை, கால்பந்து, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் என மொத்தம் 7 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இன்று கேலோ இந்திய பாரா விளையாட்டு போட்டிகளுக்கான லோகோ மற்றும் சின்னம் இன்று மானெக்ஷா மையத்தில் உள்ள ஜோராவர் ஆடிட்டோரியத்தில் வெளியிடப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பங்குபெறவுள்ளார். மேலும் இந்நிகழ்வில் விளையாட்டு வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.