மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ம மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பாஜக வலுவாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரும், அமேதி மக்களவை எம்பியுமான ஸ்மிருதி இரானி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்கும் அளவுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு போதுமான வேலைகளை செய்துள்ளது என்றார்.
பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். பிரதமர் மேக் இன் இந்தியா என்று கூறுகிறார், இல்லை என்று காங்கிரஸ் சொல்கிறது! 2047க்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை அவர் நிர்ணயித்து விட்டார். பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாங்கள் கடினமான பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறோம். நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். ஜல் ஜீவன் பணியை சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம். 13 கோடி குடும்பங்களுக்கு முதல் முறையாக தண்ணீர் கிடைக்கிறது என அவர் கூறினார்.
13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.ஆயுஷ்மான் பாரத் ஆதரவைப் பெற்ற 10 கோடி குடும்பங்கள் எங்களிடம் உள்ளன.
எங்களிடம் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற 3.5 கோடி பேர் உள்ளனர். 100 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். நாங்கள் உலகளாவிய தெற்கின் குரலாக மாறுகிறோம். ஜி-20 தலைவர் பதவியை பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மல்லிகார்ஜுன் கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தொடர்பாக பதில் அளித்த அவர், “இந்தப் பெயர் (வருங்கால பிரதமர் வேட்பாளரின்) சோனியா காந்தியிடமிருந்து வரவில்லை. இது காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்லாத கட்சிகளிடம் இருந்து வந்துள்ளதாக கூறினார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரைப்போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மிமிக்ரி செய்த போது, அதனை ராகுல் காந்தி படம் பிடித்ததற்கு ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்தார்.