ஜம்மு காஷ்மீரில் இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!
Sep 12, 2026, 09:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 21, 2023, 06:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டத்தில் இன்று இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஒரு மாதத்திற்குள் இப்பகுதியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட 2-வது தீவிரவாதத் தாக்குதல் இதுவாகும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​மாவட்டம் சூரன்கோட் பகுதியில் உள்ள டி.கே.ஜி. எனப்படும் தேரா கி கலி என்ற இடத்தில் இராணுவ டிரக் சென்று கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், அந்த டிரக் மீது தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பதற்காக அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன. மேலும், சம்பவ இடத்திற்கு கூடுதல் இராணுவம் வரவழைக்கப்பட்டு, என்கவுன்ட்டர் நடந்து வருவதாக, இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, கடந்த மாதம் ரஜோரியின் கலாகோட்டில் இராணுவம் மற்றும் சிறப்புப் படையின் நடத்திய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 2 இராணுவ கேப்டன்கள் உட்பட 5 வீரர்கள் வீரமரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ரஜோரி, பூஞ்ச் ​​பகுதியில் நடந்த இரட்டை தாக்குதல்களில் 10 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இப்பகுதி 2003 மற்றும் 2021-க்கு இடையே பெரும்பாலும் தீவிரவாதம் இல்லாமல் இருந்தது. இதன் பிறகு இப்பகுதி தீவிரவாதிகளின் மையமாகவும், கடந்த சில ஆண்டுகளாக இராணுவத்தின் மீது பெரும் தாக்குதல் நடத்தும் இடமாகவும் மாறி இருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் நடந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது 35 இராணுவ வீரர்கள் வீரமரணமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: jammu kashmirattackterroristMilitary Truck
Share
Tweet
SendShare
Previous Post

முன்னாள் பிரதமர் தேவகௌடாவைச் சந்தித்த பிரதமர் மோடி!

Next Post

கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது : ஸ்மிருதி இரானி 

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies