அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற 550 ஆண்டு கனவு நனவாகும் வகையில், கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020ஆம் ஆண்டு ஆக்ஸட் 5ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 40 கிலோ வெள்ளியிலான செங்கலை, கருவறை அமையும் இடத்தில் வைத்து அடிக்கல் நாட்டினார்.
இதனைத்தொடர்ந்து கோவில் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் 22ஆம் தேதி அயோத்தி கோவிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழா அழைப்பிதழ் பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க போவதில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அறிவித்துள்ளன. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது தொடர்பாக சில கேள்விகளையும் அக்கட்சிகள் எழுப்பியுள்ளன. அதற்கான விடையை விரிவாக பார்க்கலாம்.
முதலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் சாதனைகளை பார்க்கலாம்.
1. நாடு முழுவதும் 50,000 கி.மீ சாலைகள்.
2. 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை
3. 10,000 ஜன் ஔஷதி கேந்திரா ( மருந்தகம்)
4. 220 கோடி இலவச தடுப்பூசிகள்.
5. 51 கோடி வங்கிக் கணக்குகள்.
6. 45 கோடி முத்ரா கடன்கள்.
7. ₹1 லட்சம் கோடி பாதுகாப்பு உற்பத்தி
8. வறுமையிலிருந்து 13 கோடி பேர் மீட்பு
9. சந்திரயான்-3 சாதனை
10. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2023 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 58 பில்லியன் டாலர்கள் அதிகரிப்பு
11. இந்திய ஜிடிபி 2013ல் 1.8 டிரில்லியனில் இருந்து 2023ல் 3.7 டிரில்லியனாக இருமடங்காக உயர்வு
12. சென்செக்ஸ் 20,000 லிருந்து 72000 வரை 350 % ஆக உயர்வு
13. 2013 இல் 10% ஆக இருந்த பணவீக்கம், 2023 இல் 5% ஆக பாதியாக குறைப்பு
14. உலகின் 3 வது பெரிய STARTUP சுற்றுச்சூழலாக மாறும் இந்தியா
15. பாகிஸ்தானை பொருளாதார ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் வெற்றி கண்டது.
16. இந்தியா 1947ல் இருந்து $900 பில்லியன் FDI பெற்றது. கடந்த 90 மாதங்களில் $500 பில்லியன் வந்தது. 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 ஆண்டுகளாக, அன்னிய நேரடி முதலீட்டில் இந்தியா சாதனை படைத்துள்ளது.
17. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் டேட்டா பயன்பாட்டில் இந்தியா 122வது இடத்தில் இருந்தது. இன்று அமெரிக்கா, சீனாவை விட இந்தியா அதிக மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துகிறது.
ஐஐடிகளின் எண்ணிக்கை
2014: 16
2023: 23
ஐஐஎம்களின் எண்ணிக்கை
2014: 13
2023: 20
ஐஐஐடிகளின் எண்ணிக்கை
2014: 09
2023: 24
இன்ஸ்டிடியூட் ஆஃப் நேஷனல் இம்ப்.
2014: 75
2023: 167
கடந்த 10 ஆண்டுகளில் கல்வியில் குறிப்பாக மருத்துவ அறிவியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை
2014 – 385 ( 209 பிரைவேட் + 176 அரசு)
2022 – 704 ( 299 பிரைவேட் + 405 அரசு)
MBBS இல் மருத்துவ இடங்கள்:
2014 – 51,348
2023 – 108940
(112% அதிகரிப்பு)
முதுகலை மருத்துவ இருக்கைகள்
2014 – 31,185
2023 – 70,674
(127% அதிகரிப்பு)
காங்கிரஸ் ஆட்சியில் எங்கு, எப்போது குண்டு வெடிக்கும் என்று தெரியாது. ஜம்மு காஷ்மீரில் வன்முறை நடைபெறாத நாளே இல்லை என்று கூறலாம். ஆனால் மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பின்பு அங்கு நிலைமை மாறியுள்ளது.
கடந்த 70 ஆண்டுகளாக எரிந்து கொண்டிருந்த காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீரமைக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் அமைதி நிலைநாட்டபட்டுள்ளது. ஒரு நாட்டின் மக்கள் பாதுகாப்பாக. சந்தோஷமாக உள்ளனர் என்பதை அந்நாட்டின் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மூலம் தான் கணிக்க முடியும். அதில் மத்திய பாஜக அரசு மிகப்பெரிய வெற்றி கண்டுள்ளது என்றார் அது மிகையில்லை.
எனவே மத்திய அரசு என்ன சாதனை செய்துவிட்டது, ராமர் கோவில் தேவையா என கூக்குரல் எழுப்பும் எதிர்கட்சிகளுக்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள புள்ளிவிவரம் தக்க பதில் தரும்.
மெக்காவில் உள்ள காபாவை ஆன்மீக மற்றும் பொருளாதார சுற்றுச்சூழல் அமைப்புகளை நிலைநிறுத்தும் ஒரு இஸ்லாமிய மசூதியை என்று அனுமானமாக ஒருவர் கூறலாம்.
வாடிகனை நாம் இதே போன்ற சுற்றுச்சூழல் அமைப்பாக ஒப்பிடலாம்.
இதேபோன்ற சுற்றுச்சூழல் அமைப்பை (ராமர் கோவில்) உருவாக்குவதன் மூலம் இந்தியா கடந்த காலத்தின் எச்சங்களை மறுபரிசீலனை செய்வதில் தவறில்லை.
ராமர் கோவிலை கட்டியதன் மூலம் 550 ஆண்டுகால இந்துக்களின் கனவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது.அதுமட்டுமின்றி அயோத்தி நகரம் மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாறும். இதன் மூலம் மத்திய, மாநில அரசுகள் சுற்றுலா மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.