முதல்வரிடம் கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன் ? திருமாவளவனுக்கு அண்ணாமலை கேள்வி!
Jul 26, 2025, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வரிடம் கேட்காமல் தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன் ? திருமாவளவனுக்கு அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Jan 28, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை உட்கார வைத்து விட்டு, அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்காமல் திருமாவளவன் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளைப் போல, நடுநாடு என்றழைக்கப்பட்ட, தொன்மையான கலாச்சாரத்தை கொண்ட விழுப்புரம் மண்ணில், தமிழகத்தில் நேர்மையானதொரு அரசியல் மாற்றம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே சாத்தியம் என்ற நம்பிக்கையோடு, பெரும் திரளெனக் கூடிய பொதுமக்கள் ஆரவாரத்தால் சிறப்புற்றது. சோழர்களின் குல குருக்கள் வாழ்ந்த புண்ணிய பூமி. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தது விழுப்புரம் மண்ணில் தான்.

விழுப்புரத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் இருக்கிறார்கள். இங்கே செய்யப்படும் எடைக் குறைந்த மூக்குத்திகள், நாடு முழுவதும் பிரபலம். இவர்களைப் போன்ற கைவினைக் கலைஞர்கள் பயன்பெறத்தான், நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்துள்ளார். இதற்கு 13,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 3 லட்ச ரூபாய் வரை பிணையில்லாத கடன் வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் மொத்த உள்மாநில உற்பத்தியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களின் பங்கு 34%. ஆனால், விழுப்புரத்தின் பங்கு வெறும் 2.6% மட்டுமே. தமிழகத்தில் மனித வளர்ச்சி குறியீட்டில் கடைசியிலிருந்து நான்காவது இடத்தில் விழுப்புரம் இருக்கிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இன சகோதரர்கள் அதிகம் வாழும் பகுதியான விழுப்புரத்தை, இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளாக விழுப்புரத்தை வளர்ச்சியில் பின்தங்கியே வைத்திருப்பதுதான் தமிழக ஆட்சியாளர்களின் கொள்கையா?

நேற்றைய தினம், திருச்சியில் விசிக கட்சி நடத்திய மாநாட்டில், வழக்கம் போல இஸ்ரேல், பாலஸ்தீனம், மணிப்பூர், இலங்கை என்று பிற நாடு, பிற மாநில பிரச்சினைகளையெல்லாம் பேசிவிட்டு, ஆளுநர் பதவியை ஒழிப்போம், நீட் தேர்வை ஒழிப்போம், GST வரியை எதிர்ப்போம் என்று தங்களுக்குச் சம்பந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் அண்ணன் திருமாவளவன் பேசிக்கொண்டிருந்தார்.

தமிழக மக்களுக்காகப் பேசாமல், இவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களால் என்ன பயன்? வேங்கைவயல் சம்பவம் நடந்து 14 மாதங்கள் ஆகியும், இன்று வரை குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் சாதிய ரீதியான வன்கொடுமைகள் பரவலாக உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேடையில் முதலமைச்சர் ஸ்டாலினை உட்கார வைத்து விட்டு, அவரிடம் கேட்க வேண்டியவற்றைக் கேட்காமல் அரசியல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் திருமாவளவன்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரண்டு அமைச்சர்கள். ஒருவர் பொன்முடி. மற்றொருவர் செஞ்சி மஸ்தான். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த அமைச்சர் பொன்முடி தற்போது துறையில்லாத அமைச்சராக இருக்கிறார். செஞ்சி மஸ்தான் உண்மையில் சாராயம் காய்ச்சுபவர் நலத்துறை அமைச்சராகத்தான் இருக்க வேண்டும். அமைச்சர் பொன்முடி மீது மூன்று வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் தண்டனை பெற்றுள்ளார்.

இன்னும் இரண்டு வழக்குகளில் தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறார்.  அமலாக்கத்துறை சோதனையில் ₹41.9 கோடி வங்கி வைப்புத் தொகை மற்றும் ஒரு இந்தோனேசிய நிறுவனத்தை, வெறும் ₹41.57 லட்சத்திற்கு வாங்கியதாகக் கணக்கு காட்டி, பின்னர் 2022 ஆம் ஆண்டு, ₹100 கோடிக்கு விற்கப்பட்டதிலும், ஹவாலா மூலம் பெருமளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

வரும் பாராளுமன்றத் தேர்தல், நேர்மையான நல்லாட்சிக்கும், குடும்ப ஊழல் ஆட்சிக்கும் இடையேயான தேர்தல். ஏழை எளிய மக்களுக்கான பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சிக்கும், காங்கிரஸ், திமுக ஊழல் கட்சிகளுக்கும் இடையேயான தேர்தல். தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக, குடும்ப அரசியல் ஒழிய, நமது குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம். பாரதப் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: en mann en makkalvilupuramvckthirumavalavanbjpannamalai
ShareTweetSendShare
Previous Post

AI உதவியால் எழுதிய நாவலுக்கு விருது !

Next Post

இன்று ஆளுநரை சந்திக்கிறார் நிதிஷ்குமார் : பதவி விலகல் கடிதத்தை அளிக்க உள்ளதாக தகவல்!

Related News

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies