பிரதமர் நரேந்திர மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டெல்லியில் சந்தித்து பேசினார் .
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் அவர் சந்தித்து பேசினார். அப்போது ஏஐ தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதுதொடர்பாக பில்கேட்ஸ் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியை சந்திப்பது எப்போதும் உத்வேகம் அளிப்பதாகவும். செயற்கை நுண்ணறிவு, பெண்கள் மேம்பாடு, விவசாயத்தில் புதுமை, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாகப் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.
உண்மையிலேயே ஒரு அற்புதமான சந்திப்பு என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வளர்ச்சி அளிக்கும் துறைகளைப் பற்றி இந்த சந்திப்பில் விவாதித்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.
முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். கடந்த 28ஆம் தேதி இந்திய வந்த அவர், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார்.