கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் விஜேந்திரா எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியல் தொடர்பாக கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜேந்திரா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர்கள் மாநில ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
இந்த பட்டியல் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்த அவர், 28 தொகுதிகளிலும் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறினார். மதசார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து தகுதியான வேட்பாளரை களமிறக்கி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் அவர் கூறினார்.