நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேச, வாக்களிக்க உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது குற்றமே: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Murugesan M by Murugesan M
Mar 4, 2024, 12:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற அவையில் வாக்களிக்க மற்றும் பேசுவதற்கு எம்.பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்குவது குற்றம் எனவும், இது குறித்த விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

1998-ல் பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் வகையில் கூட்டணியில் இருந்துகொண்டே ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உறுப்பினர்கள் மாற்று கட்சிக்கு வாக்களித்தனர். இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த 1998ல் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கி இருந்தது. அந்த தீர்ப்பை 25 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றும் வகையில் தற்போது ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அப்போது, 1998-ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் லஞ்சம் வாங்கும் உறுப்பினர்கள் விசாரணையில் இருந்து விலக்கு கோர முடியாது. சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொதுவாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும். எனவே, 1998ம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.

லஞ்சம் வாங்குவது என்பது நாடாளுமன்ற சிறப்பு உரிமைகளால் பாதுகாக்கப்பட்டது அல்ல. நாடாளுமன்ற சலுகையை பயன்படுத்தி எம்.பி லஞ்சம் வாங்கி சட்ட பாதுகாப்பை பெறுவதை அனுமதிக்க முடியாது. எம்.பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் வாங்கினாலும் குற்றமே. லஞ்சம் வாங்குவது என்பது எம்.பி, எம்எல்ஏக்களின் தனிப்பட்ட குற்றம். மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க லஞ்சம் பெறும் எம்.எல்.ஏ.க்கள் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்” இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

Tags: supreme court chief justice chandrachud
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்தில் 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!

Next Post

கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு :  பாஜக மாநில தலைவர் விஜேந்திரா உறுதி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies