ஆர்எஸ்எஸ் சென்னை சம்பர்கவிபாக் சார்பில் பட்டய கணக்காயர்கள் கூட்டம் நடைபெற்றது.
கடந்த 18ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் தக்ஷிணாமூர்த்தி அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆர்எஸ்எஸ் தென் பாரத தலைவர் டாக்டர் வன்னிய ராஜன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ICAI முன்னாள் தலைவர் ஆடிட்டர் R பூபதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் சென்னையை சேர்ந்த 230 ஆடிட்டர்கள் பங்கேற்றனர்.
இதில், ஆர்எஸ்எஸ் பற்றிய பல சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றதோடு தாங்களும்
ஆர்எஸ்எஸ் சேவை பணியில் இணைந்து பணியாற்றுவதாக தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக 32 ஆடிட்டர்கள் கொண்ட குழு(கட்நாயக்) அமைக்கப்பட்டது. ஆடிட்டர் வெங்கட்ராமன் வரவேற்புரை ஆற்றினார். ஆடிட்டர் சிவகுருநாதன் நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.