ராமர் குறித்த ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது,வேலைவாய்ப்பை அளிக்கக்கூடாது என்பதே பிரதமா் நரேந்திர மோடியின் நோக்கம். அதன் காரணமாகத்தான் அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை மத்திய அரசு நிரப்பாமல் விட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார்.
நமது இளைஞர்கள் எந்த நேரமும் செல்போனில் மூழ்கி இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புவதாக தெரிவித்த அவர், இளைஞர்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷம் போட வேண்டும்.அவர்கள் பசியால் சாக வேண்டும் என எண்ணுவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. யாத்திரையின் போது பாஜகவினரும் உருளைக்கிழங்கு வழங்கி, அதற்குப் பதிலாக தங்கம் தருமாறு கோஷம் எழுப்பினர். ஏற்கனவே இண்டி கூட்டணி கட்சியில் உள்ள உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா ஆகியோர் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது ராகுலும் சிக்கியுள்ளார்.