ஆந்திராவில் நடைபெற்ற தேசிய முற்போக்கு கூட்டணி பிரச்சார கூட்டத்தில் விளக்கு கோபுரம் மேல் ஏறி நின்ற தொண்டர்களை கீழே இறங்க சொன்ன பிரதமர் மோடி, பின்னர் தனது உரையை தொடங்கினார்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக, தெலுங்கு சேதம், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்நிலையில், பல்நாடு மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக முற்போக்கு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருடன் தெலுங்கு சேத கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு,ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிரதமர் தனது உரையை தொடங்கும் போது, தொண்டர்கள் சிலர் விளக்கு கோபுரத்தின் உச்சியில்டி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை கீழே இறங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். பிரதமரை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவும் தொண்டர்களை கீழே இறங்குமாறு வலியுறுத்தினார். பின்னர் தொண்டர்கள் கீழே இறங்கியவுடன் பிரதமர் மோடி உரையை தொடங்கினார்.
மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 17 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், ஜனசேனா இரு இடங்களிலும் போட்டியிடுகிறது. அதேபோல் சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும்,பாஜக 10 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களில் போட்டியிடுகிறது.