பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள திறமையான அரசுகள், தங்கள் வரியைக் குறைத்து, தங்கள் மாநில மக்களின் எரிபொருள் விலைச் சுமையைக் குறைத்துள்ளன என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது, தமிழக மக்கள் காட்டும் பேரன்பையும், பிரதமர் அவர்களின் பொதுக்கூட்டங்களுக்குத் தமிழகத்தில் கிடைக்கும் உற்சாக வரவேற்பையும் கண்டு பயந்துள்ள திமுக, முழுக்க முழுக்க பொய்கள் மட்டுமே நிரம்பிய ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறது.
திமுக கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகள், எந்தக் காலத்திலும் திமுக காங்கிரஸ் இண்டிக் கூட்டணியால் நிறைவேற்ற முடியாது என்பது நன்கு தெரிந்தும், சாத்தியமற்ற வாக்குறுதிகளைக் கொடுத்திருப்பதன் மூலம், வேண்டுமென்றே மக்களிடம் தவறான தகவல்களைப் பரப்புகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு 75 ரூபாயாகவும், 65 ரூபாயாகவும் குறைப்போம் என்று திமுக கூறியுள்ளது.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது, தமிழக மக்கள் காட்டும் பேரன்பையும், பிரதமர் அவர்களின் பொதுக்கூட்டங்களுக்குத் தமிழகத்தில் கிடைக்கும் உற்சாக வரவேற்பையும் கண்டு பயந்துள்ள திமுக, முழுக்க முழுக்க பொய்கள் மட்டுமே நிரம்பிய ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு,… pic.twitter.com/EY2FmSaWPT
— Hardeep Singh Puri (मोदी का परिवार) (@HardeepSPuri) March 20, 2024
உண்மையான நிலவரம் என்னவென்றால், கடந்த வாரம், மார்ச் 15 அன்று, தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே லிட்டருக்கு ரூ.100.75 மற்றும் ரூ.92.34 ஆக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் இருக்கும் உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.94.65 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.87.76 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, குஜராத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.94.65 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.90.32 ஆகவும் உள்ளது.
தமிழகம் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் எரிபொருள் விலையில் உள்ள பெரிய வித்தியாசமே திமுகவின் ஏமாற்றுத் தேர்தல் அறிக்கையை தோலுரிக்கப் போதுமானது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் 2021-2022 ஆண்டில், ரூ.20,586 கோடி வரி, 2022-2023 ஆண்டில், ரூ.24,309 வரி, 2023 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை, ரூ.17,861 கோடி மாநில வாட் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள திறமையான அரசுகள், தங்கள் வரியைக் குறைத்து, தங்கள் மாநில மக்களின் எரிபொருள் விலைச் சுமையைக் குறைத்துள்ளன.
ஆனால், திமுக மக்களைக் குறித்துச் சிறிதும் கவலையில்லாமல், பெட்ரோலியப் பொருள்கள் விலையைக் குறைக்காமல், செயல்பட்டு வருகிறது. நேர்மையான அரசாக இருந்திருந்தால், 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், 2022 ஆம் ஆண்டு மே மாதத்திலும், மத்திய அரசு கலால் வரிகளை குறைத்த போது, பாஜக ஆளும் பல மாநிலங்கள் செய்தது போல், திமுகவும் மாநில வாட் வரியை குறைத்து, தமிழக மக்கள் பயனடையும்படி விலையைக் குறைத்திருக்க வேண்டும்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே தலைவர் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான் என்பதையும், மோடியின் உத்தரவாதம் மட்டுமே வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுகிறது என்பதையும், நமது நாட்டு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது, திமுக கொடுத்திருக்கும் பொய்யான, நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகள் மூலம் தெளிவாகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு ₹5 மற்றும் லிட்டருக்கு ₹10 குறைத்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே லிட்டருக்கு ₹8 மற்றும் ₹6 குறைக்கப்பட்டது. கடந்த வாரத்தில், மார்ச் 14 அன்று, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மக்களின் நலனுக்காக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு மேலும் 2 ரூபாய் குறைத்தன.
இவை போன்ற மக்கள் நலச் செயல்பாடுகளால், தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள #மோடியின்குடும்பம் பெறத்தக்க வெற்றி மிகவும் பெரியது. #AbKiBaar400Paar எனத் தெரிவித்துள்ளார்.