மத்திய அரசின் திட்டங்கள் குறித்து தவறான வதந்திகளை கட்டுப்படுத்த உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு PIB இன் கீழ் உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்தப்பட்டது.இது போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை உருவாக்குபவர்கள் மற்றும் பரப்புபவர்களைத் தடுக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. மத்திய அரசு தொடர்பான சந்தேகத்திற்குரிய தகவல்களைப் புகாரளிப்பதற்கான எளிதான வழியையும் இது வழங்குகிறது.
இந்நிலையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் (MIB) செய்தித் தகவல் பணியகத்தின் (PIB) கீழ் உள்ள உண்மை கண்டறியும் குழு FCU) மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவாக அறிவித்துள்ளது.
அரசின் கொள்கைகள், முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் பற்றிய தவறான தகவல்களைத் தானாக முன்வந்து அல்லது புகார்கள் மூலமாக உண்மைச் சரிபார்ப்புப் பிரிவு கண்டறியும். அரசாங்கத்தைப் பற்றிய தவறான தகவல்கள் உடனடியாக சரி செய்யப்படுவதை இந்த பிரிவு உறுதிசெய்யும்.
வாட்ஸ்அப் (+918799711259), மின்னஞ்சல் (pibfactcheck[at]gmail[dot]com), Twitter (@PIBFactCheck) மற்றும் PIB இன் இணையதளம் ( https://factcheck) உள்ளிட்ட பல்வேறு முறைகள் மூலம் குடிமக்கள் PIB உண்மைச் சரிபார்ப்புப் பிரிவை அணுகலாம்.