குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் திமுக! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Jul 4, 2025, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Apr 2, 2024, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியை தவிர, பிரதமர் பதவிக்குத் தகுதியான வேறு தலைவர்கள் யாரும் இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆனைக்கட்டி, தடாகம், சின்னதடாகம், கணுவாய் பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளரும், பாஜக மாநிலத் தலைவருமான அண்ணாமலை, பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பத்து ஆண்டுகளாக ஊழலற்ற ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது பிரதமர் திரு மோடி அவர்கள், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி.

நமது பாரதப் பிரதமர் மோடியை தவிர, பிரதமர் பதவிக்குத் தகுதியான வேறு தலைவர்கள் யாரும் இல்லை. நமது பிரதமரிடம் உதவிகளைப் பெற்று, நமது கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு என்னென்ன நலத்திட்டங்களை எல்லாம் கொண்டு வரலாம் என்று சிந்திக்கக் கூடிய பாராளுமன்ற உறுப்பினர் நமக்குத் தேவை. இத்தனை ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், கோயம்புத்தூரின் வளர்ச்சியைக் குறித்துச் சிந்திக்கவில்லை.

திமுகவைப் பொறுத்தவரை, குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் ஏமாற்றுவாதிகள். குறிப்பாக, இந்தப் பகுதிகளில் உள்ள செங்கல் சூளை பிரச்சினையை உருவாக்கியதே திமுக அரசுதான். மூன்று ஆண்டுகளாக, பொதுமக்கள் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் இருந்துவிட்டு, தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகள் அளிப்பார்கள்.

மத்திய அரசின் பக்கமிருந்து, செங்கல் சூளைகளுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்று உறுதி அளிக்கிறேன். திமுக அரசை எதிர்த்துப் போராடும் பொதுமக்களோடு நின்று, செங்கல் சூளைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம்.

ஆனைக்கட்டி உள்ளிட்ட பழங்குடி சமூக, மலைவாழ் மக்கள் வாழும் மலைக்கிராமங்களை மேம்படுத்த ஆதி ஆதர்ஷ் திட்டம் மூலம், சாலைகள் அமைப்பது, வீடுகள் கட்டிக் கொடுப்பது, குழந்தைகளின் தரமான கல்விக்கு ஏகலைவா பள்ளிகள் அமைப்பது எனப் மத்திய அரசு செய்துள்ள பணிகள் ஏராளம்.

இந்தியாவின் முதல் குடிமகள் என்ற உயரிய குடியரசுத் தலைவர் பதவிக்கு, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவைத் தேர்ந்தெடுத்ததும் நமது பிரதமர் மோடி தான். அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கான நிதி மத்திய அரசிடம் இருந்தே வருகிறது.

பிரதமராக நமது அன்புக்குரிய திரு நரேந்திர மோடி அவர்கள் வந்த பிறகுதான், மலைவாழ் பகுதிகளில் அரசின் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. பழங்குடி சமூகத்தின் புகழைப் போற்ற மத்திய அரசின் சார்பில் பழங்குடியினர் தினம் கொண்டாடப்படுகிறது. மலைவாழ் மக்களுக்குப் பாதுகாவலனாக நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இருக்கிறார்.

ஊழலில் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, வாக்குகளுக்குப் பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று திமுகவினர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால், தமிழக அரசியலில் இப்போது மாற்றம் இல்லையென்றால் எப்போதும் இல்லை என்பதில் நமது இளைஞர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், இயற்கையும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட, மத்திய அரசின் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைக்க, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இயற்கையோடு இணைந்த வளர்ச்சி கிடைத்திட, மனிதன், வன விலங்குகள் மோதல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிட, நமது அடுத்த தலைமுறை குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, எளிய சாமானிய மக்களின் சின்னம், நமது பிரதமர் மோடியின் சின்னம், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சின்னம், பாஜகவின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், உங்கள் அன்பை முழுவதும் பெற்றுள்ள அண்ணாமலை ஆகிய என்னை, வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு கொடுத்த ரோகித் – வைரலாகும் வீடியோ!

Next Post

ஓய்வு எடுக்க வெளிநாடுகளுக்கு செல்லும் ராகுல் காந்தி, ஓய்வின்றி நாட்டிற்காக உழைக்கும் பிரதமர் மோடி : அமித் ஷா பேச்சு!

Related News

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

Load More

அண்மைச் செய்திகள்

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies