எல்லை பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பணிகளை இந்திய ராணுவம் சிறப்பாக செய்து வருவதாக அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ராணுவ தளபதிகள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்,
நாட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் எழுச்சியூட்டும் அமைப்புகளில் ஒன்றாக விளங்கும் இந்திய ராணுவத்தின் மீது நூறு கோடிக்கும் அதிகமான குடிமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
நமது எல்லைகளைப் பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், ஒவ்வொரு தேவையின் போதும் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதிலும் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பை அவர் எடுத்துரைத்தார்.
வெளிநாட்டு ராணுவங்களுடன் நீடித்த ஒத்துழைப்பையும் உறவுகளையும் உருவாக்குவதன் மூலம் நமது தேசிய பாதுகாப்பு நலன்களை மேம்படுத்த ராணுவத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக தியாகம் செய்த அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார்.