கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இளைஞர் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 6 வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டனர்.
பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த அருள்பாண்டி என்பவருக்கும், இந்திர்சித் என்பவருக்கும் இடையே கை குலுக்கியது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நண்பர்களுடன் மேட்டுப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற அருள்பாண்டி கார் ஏற்றிக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கில் இந்திர்சித் உட்பட 6 வட மாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.