"உங்களுடன் என்றும் நான் இருப்பேன்" - மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி
Oct 17, 2026, 07:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“உங்களுடன் என்றும் நான் இருப்பேன்” – மணிப்பூர் மக்களை நெகிழ வைத்த பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக மணிப்பூர்  சென்றார். அங்கு அம்மாநில மக்களுடன் கலந்துரையாடிய அவர், பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார்.

2023ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே ஏற்பட்ட மோதலால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர்.

மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் பலனாக அம்மாநிலத்தில் தற்போது அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில், கலவரச் சம்பவத்திற்கு பிறகு முதன்முறையாகப் பிரதமர் மோடி மணிப்பூர் பயணித்தார்.

தலைநகர் இம்பால் சென்றடைந்த அவரை மணிப்பூர் மாநில சிறுமிகள் பூங்கொத்து கொடுத்தும், மோடியின் ஓவியத்தை நினைவு பரிசாக வழங்கியும் வரவேற்றனர். அப்போது சிறுவன் ஒருவன் மணிப்பூரின் பாரம்பரிய தொப்பியைப் பிரதமருக்கு அணிவித்தார். அதனை அவர் நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.பின்னர், மணிப்பூர் மக்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய சிறுமி, மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டிய மத்திய அரசுக்குக் கண்ணீர் மல்க நன்றித் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் சுராசந்த்பூருக்குப் பிரதமர் மோடி சென்றார். அப்போது பல கிலோமீட்டர்த் தூரத்திற்கு சாலையின் ஓரத்தில் தேசியக்கொடியுடன் நின்று மணிப்பூர் மாணவர்களும், மக்களும் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சென்றடைந்த அவர், மணிப்பூரின் வளர்ச்சிக்காக
சுமார் 7,300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தைரியம் மற்றும் துணிச்சலுக்குப் பெயர் பெற்ற மாநிலம் மணிப்பூர் எனப் புகழாரம் சூட்டினார். மணிப்பூர் மக்களின் உத்வேகத்துக்குத் தலைவணங்குவதாக தெரிவித்த அவர், மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மணிப்பூர்ப் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் எனக் கூறினார்.

மேலும், வளர்ச்சிக்கு அமைதி மிகவும் அவசியமானது எனவும், பள்ளத்தாக்கு மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பிரதமர்த் தெரிவித்தார். அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், மணிப்பூர் மக்களுக்குப் பக்கபலமாக தானும், மத்திய அரசும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மணிப்பூர் பயணத்திற்கு முன்னதாக, மிசோரம் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தார். குறிப்பாக, 51 கிலோ மீட்டர் நீளமுள்ள பைராயி- சாய்ராங் ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Tags: PM Modiபிரதமர் மோடிமணிப்பூர்"I will always be with you" - PM Modi inspires the people of Manipur
Share
Tweet
SendShare
Previous Post

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Next Post

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies