மகாராஷ்டிராவை சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ஒட்டகத்தில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
அவுரங்காபாத் மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக சாகேப் கான் பதான் என்பவர் போட்டியிடுகிறார்.
இவர் ஆதரவாளர்கள் புடை சூழ ஒட்டகத்தின் மீது அமர்ந்து ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மஹாராஷ்டிராவில் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஏப்ரல் 19 ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.