மயிலாடுதுறையில் உள்ள சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்கு திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர், சட்டை நாதர், தோனியப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அமைந்திருக்கும் நிலையில் இக்கோயிலில் 13-ம் நாள் தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வின் போது தீர்த்த குளத்தில் எழுந்தருளிய சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.