திருப்பத்தூரில் சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கிய டிராக்டர் சுமார் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டது.
ஆம்பூர் ரெட்டித் தோப்பு அருகே சாலையில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடாமல் இருந்துள்ளது.
இதனை கவனிக்காமல் அந்த வழியாக வந்த டிராக்டர் பள்ளத்தில் சிக்கியது. இதனையடுத்து மாற்று வாகனம் மூலமாக 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் பள்ளத்தில் இருந்து டிராக்டர் மீட்கப்பட்டது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.