கிழக்கு துர்கிஸ்தானில் உள்ள உய்குர்கள், கசாக்ஸ், கிர்கிஸ் உள்ளிட்ட துருக்கிய இனக்குழுக்களுக்கு எதிராக சீனா இனப்படுகொலைகளை நிகழ்த்தி வருவதாக உய்குர் உரிமைகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட 2023-ம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில், கிழக்கு துர்கிஸ்தானில் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்தல், கட்டாய உழைப்பு, கல்வி மறுப்பு, பூர்வீக மொழிகளுக்குத் தடை விதித்தல் உள்பட பல்வேறு அத்துமீறல்களில் சீனா ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தடுக்க சர்வதேச நடவடிக்கை தேவை எனவும், வெறும் கண்டனத்தோடு நிறுத்தி விடாமல், பொருளாதாரத் தடை போன்ற நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்க வேண்டுமென உய்குர் உரிமைகள் நல அமைப்பு வலியுறுத்தியுள்ளது.