ராமநாதபுரத்தில் சாக்கடை கழிவுகளை கையுறையின்றி தூய்மை பணியாளர்கள் அகற்றிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வெளியே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக மருத்துவமனை வரும் நோயாளிகள் இங்கு உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் உணவகத்தின் வாசல் அருகே இருந்த கழிவுத் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டது. அதனை அகற்றுவதற்காக வந்த தூய்மை பணியாளர்கள் கையுறையின்றி சாக்கடை கழிவுகளை அகற்றியது அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகியது.
ராமநாதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலை நீடிப்பது ஆளும் அரசின் அலட்சியத்தை காட்டுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.