துபாயிலிருந்து திருச்சி வந்த பயணியின் வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள 24 கேரட் தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
துபாயிலிருந்து திருச்சிக்கு பயணம் செய்து வந்த நபர், பாக்கெட்டுகளுக்குள் பேஸ்ட் வடிவில் தங்கத்தை வைத்து விழுங்கி கடத்தி வந்துள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் அவரைச் சோதனை செய்த நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், 977 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு சுமார் 70 லட்சம் ரூபாய் ஆகும். இதனைத் தொடர்ந்து, தங்கத்தைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.