கேரளாவில் தேயிலை தோட்டத்தில் சுற்றித் திரியும் புலிகள் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூணாறு கன்னிமாலா தேயிலை தோட்டத்தில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், கால்நடைகள் வேட்டையாடப்படுவதாகவும் தொழிலாளர்கள் புகார் கூறிவந்தனர்.
இந்நிலையில் 3 புலிகள் வரிசையாக தேயிலைக் காடு வழியாக செல்லும் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து புலிகளை கூண்டுகள் அமைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.