நாகர்கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை அருகே தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 15 பயணிகள் காயமடைந்தனர்.
நாகர்கோவிலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னைக்கு நோக்கி வந்த ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது, சாலை தடுப்புச்சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பயணிகள், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், கிரேன் மூலம் பேருந்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.