தமிழ்நாடு – கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து நீலகிரி மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடியில் கோவை மேற்கு மண்டல ஐஜி பவாணீஸ்வரி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள மானந்தவாடி பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு ஆயுதத்துடன் வந்த மாவோயிஸ்ட்கள், தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டதாகத் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டல கோவை ஐஜி பவானீஸ்வரி கூடலூர் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.