சர்வதேச அரங்கில் நாட்டின் பலத்தை முன்னிறுத்தும் பிரதமர் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்லிபுத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது பேசியவர்,
இண்டியா கூட்டணி வகுப்புவாத, சாதிவெறி கூட்டணி என தெரிவித்தார். அந்த கூட்டணியில் உள்ள தலைவர்கள் தங்கள் வாரிசுகள் பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
இது எல்.இ.டி பல்புகளின் காலம் என்று தெரிவித்த பிரதமர் மோடி, ஆனால் பீகார் மக்கள் லாந்தருடன் திரிவதாக கூறினார். ஒரே ஒரு வீட்டில் மட்டும் எல்.இ.டி விளக்கு எரிவதாகவும், அந்த விளக்கு பீகார் முழுவதும் இருளைப் பரப்பியுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.
உங்கள் வாக்கு மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், அது நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
வலிமையான நாட்டின் திறனை முன்னரே வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் இருக்க வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.