2024 மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று பாஜக ஹாட்ரிக் வெற்றி பெறும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது கடந்த பத்து ஆண்டுகளில் நாடு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, பாஜக முழு பெரும்பான்மையுடன் ஹாட்ரிக் அடிக்கும் நேரம் வந்துவிட்டதாகவும் அவர கூறினார்.
ஏழைகளின் நலனுக்காக உழைக்க உத்வேகம் அளித்தவர் குரு ரவிதாஸ் என்றும், அவர் பிறந்த புனித பூமியான ஹோஷியார்பூரில், தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொள்வது பெருமைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்தார்.
ஊழலில் காங்கிரஸ் இரட்டை பிஎச்டி வாங்கியுள்ளதாகவும், ஆம் ஆத்மி அரசாங்கம், மாநிலத்தில் தொழில் மற்றும் விவசாயத்தை அழித்துவிட்டதாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.