2023 – 24ஆம் ஆண்டுக்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி பிரகாசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மூலதன செலவுகள், வர்த்தகம் செய்வதற்கான உகந்த சூழல், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை ஆகியவை முதலீடுகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும்,
நடப்பாண்டு வழக்கத்திற்கு மாறாக பெய்யவுள்ள தென்மேற்கு பருவமழை விவசாயத்துறைக்கு சாதமாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கரிப் கல்யாண யோஜனா திட்டம் மேலும் 5 ஆண்டுக்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் உணவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, 2024 – 25ஆம் ஆண்டில் பணவீக்கம் குறையும் என குறிப்பிட்டுள்ளது.
தென் மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறைவு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.