நாகை மாவட்டம், நாகூர் பட்டினச்சேரி மீன்பிடி துறைமுகத்தில் மத்தி மீன்கள் அதிக விலைக்கு விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் ஃபைபர் படகுகளை மட்டுமே பயன்படுத்தி மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்தனர்.
இதில் மத்தி மீன்கள் அதிகளவில் கிடைத்ததால், கிலோ ஒன்றுக்கு 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.