மின்சார பேருந்துகள் - மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 08:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசு அண்மையில் அறிமுகப்படுத்திய மின்சாரப் பேருந்துகளின் மூலம் மாதத்திற்கு சுமார் 22 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது. மின்சாரப் பேருந்துகளைத் தனியார் வசம் ஒப்படைத்ததே நஷ்டத்திற்கு முக்கிய காரணம் எனத் தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் தமிழக போக்குவரத்துத்துறையின் மூலம் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தான் இந்த மின்சாரப் பேருந்துகள் திட்டம். ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்போடு நடப்பாண்டில் மின்சாரப் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பும் இடம்பெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் முதன்முதலாக மின்சாரப் பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையின் வியாசர்பாடி, பெரும்பாக்கம் பணிமனைகளில் இருந்து மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி உள்ளிட்ட பணிமனைகளில் இருந்தும் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கியுள்ள நிலையில், செலவு அதிகரிப்பதோடு, அடிக்கடி பேருந்துகள் பழுதாகி நிற்பதால் இத்திட்டம் தோல்வி அடைந்திருப்பதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் மின்சாரப் பேருந்துகளுக்கு நாள் வாடகை கணக்கில் குறிப்பிட்ட தொகையை வழங்கும் மாநகர போக்குவரத்துக் கழகம், பேருந்தின் மூலம் வசூலிக்கப்படும் டிக்கெட் கட்டணத்தைக் கணக்கு பார்த்துப் பெற்றுக் கொள்கிறது.

அவ்வாறு மாநகர போக்குவரத்துக் கழகம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கும் வாடகைத் தொகையைவிட அப்பேருந்துகளின் மூலம் வசூலாகும் டிக்கெட் கட்டணம் மிகக்குறைந்த அளவிலேயே இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் சென்னையில் இயங்கும் 500க்கும் அதிகமான பேருந்துகளின் மூலம் மாதம் 22 கோடி ரூபாய் அளவுக்குப் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதோடு, பேருந்து அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலமாக வாங்கப்பட்டாலும் அதனை இயக்குபவரும், ஓட்டுநரும் தனியார் மூலமாகவே நியமிக்கப்படுவதும் செலவு அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது.

போக்குவரத்துத்துறை என்பது லாப, நஷ்டம் இல்லாமல் மக்கள் நலனுக்காக இயங்க வேண்டிய துறை தான் என்றாலும், தனியார் மயமாக்கி அதன் மூலம் செயற்கையான நஷ்டத்தை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

Tags: tn govermentElectric buses - Monthly loss of Rs. 22 crore: Allegation that the reason is handing over to private ownership!மின்சார பேருந்துகள்-மாதம் ரூ.22 கோடி இழப்பு
Share
Tweet
SendShare
Previous Post

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Next Post

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies