கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தனியாக செல்லவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சேக்கல் முடி அடுத்த முறுகாளி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சிறுத்தை பதுங்கி உள்ளது. இதனால், வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
எனவே, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் பணி செய்ய வேண்டும் என ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.