செங்கடல் வழியாக சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டு சரக்குக் கப்பலை ஹவுதி தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்கியுள்ளனர்.
காசாவில் இஸ்ரேலுக்கும், ஈரான் ஆதரவு ஹமாஸ் படையினருக்கும் இடையே 7 மாதங்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது.
இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்ட ஹவுதி தீவிரவாதிகள், முக்கியத்துவம் வாய்ந்த செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் செங்கடல் வழியாக லைபீரியா நாட்டுக் கொடியுடன் சென்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது. அதிலிருந்து சரக்குகளும், எண்ணெயும் கடலில் கொட்டின.
இந்த தாக்குதலில் கப்பலின் மாலுமி உயிரிழந்துவிட்டதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.