ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!
Oct 29, 2026, 11:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மலைப் பகுதி போரில் பயன்படுத்தப்பட்டு வரும் Cheetah மற்றும் Chetak  ரக ஹெலிகாப்டர்கள் காலாவதி ஆன நிலையில், அவற்றை மாற்ற இந்திய ராணுவம் முடிவெடுத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1960களில் இருந்து ராணுவச் சேவையில் இருந்து வரும் பழைய Cheetah மற்றும் Chetak ஹெலிகாப்டர்களை படிப்படியாகக் குறைப்பதற்கான செயல்முறையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

200 நவீன உளவு மற்றும் கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை (RSH) வாங்குவதற்கான டெண்டரை  (RFI) இந்திய இராணுவம் வெளியிட்டுள்ளது. இதில், தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், கொள்முதல் வழிமுறைகள் மற்றும் விற்பனையாளர்களின் பட்டியலுடன், தனியாகவோ அல்லது வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்களுடன் கூட்டாகவோ பணிபுரியும் இந்திய நிறுவனங்களின் முன்மொழிவுகள் வரவேற்கப்படுவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தப் புதிய ஹெலிகாப்டர்கள் வெறும் பறப்பதற்கு மட்டுமல்ல, எல்லை ரோந்து, விரைவான துருப்புக்களை இறக்குதல், மீட்புப் பணிகள் மற்றும் வெளியேற்றுதல் ஆகியவற்றைக் கையாளப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இரவும் பகலும் இயங்கக் கூடிய இந்த புதிய ஹெலிகாப்டர்கள், உளவுத்துறை மற்றும் கண்காணிப்பு, மட்டுமின்றி, பேரிடர் மீட்புப் பணிகளின் போதும், தேடும் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான, பாதுகாப்பு நிலைக்குழு அறிக்கையில், ரேடார்கள், இலகுரக போர் விமானம் (LCA), இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் (LUH), பல் பணி ஹெலிகாப்டர்கள் மற்றும் குத்தகைக்கு எடுக்கப்பட்ட நடு-வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் ஆகியவை  கொள்முதல் செய்வதற்கான திட்டம் கூறப்பட்டிருந்தது.

ஏற்கெனவே, பாதுகாப்பு அமைச்சரவைக் குழு, ராணுவம் மற்றும் விமானப்படைக்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடமிருந்து  45,000 கோடி ரூபாய்க்கு 156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு  ஒப்புதல் அளித்துள்ளது.

ஆர்டர் செய்யப்பட்ட 187 இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்களுடன் கூடுதலாக 200 நவீன உளவு மற்றும் கண்காணிப்பு ஹெலிகாப்டர்கள் தயாராகிறது என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வரும் 2027ம் ஆண்டிலிருந்து, பழைய Cheetah மற்றும் Chetak  ஹெலிகாப்டர்கள் ஓய்வு பெறத் தொடங்கும் எனக் கூறியுள்ளனர்.

பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவை அடைவதிலும், உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் வளர்ச்சியை ஆதரிப்பதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், போர் விமானங்கள், போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பயிற்சி விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ரேடார்கள் என  உள்நாட்டு ஆயுத தளவாட உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

Tags: indian armyஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள்Retiring Cheetah helicopters: Indian Army tenders to purchase 200 modern light helicopters
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

Next Post

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

Related News

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies