அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 08:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா மீது அமெரிக்கா வர்த்தகப் போரைத் தீவிரமாக்கியுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சீனாவின் பரம எதிரியான பிலிப்பைன்ஸ் இந்தியாவுடன் இணைந்து நிற்பது தெற்காசியப் புவி அரசியலில் ஒரு புதிய அத்தியாயமாகப் பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

7,000 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின்  முக்கிய நாடாக உள்ளது. 120 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன்  வளர்ந்து வரும் பொருளாதாரமாக விளங்கும் பிலிப்பைன்ஸ், அடிக்கடி சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் ஒரு நாடாக உள்ளது.

கடந்த 75 ஆண்டுகளாக, இந்தியா-பிலிப்பைன்ஸ், இருநாடுகளும் வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு மற்றும் உள்துறை பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, வேளாண்மை, சுகாதாரம், மருந்துத்துறை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல துறைகளில் வலுவான கூட்டுறவை மேற்கொண்டுள்ளன.

மேலும், இந்தியாவின் ASEAN-உடனான விரிவான மூலதன உறவுத் திட்டம் (Comprehensive Strategic Partnership) வழியாகப் பிராந்திய மட்டத்திலும் பிலிப்பைன்ஸ் இந்தியாவுடன் செயல்பட்டு வருகிறது.  ஏற்கெனவே, அமெரிக்காவுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ள உள்ள பிலிப்பைன்ஸ், எந்த நேரத்திலும் அமெரிக்கா நழுவலாம் என்ற நிலையில், இந்தியா தான் நம்பகமான நாடு என்று இந்தியாவுடன் நெருங்கி வந்துள்ளது.

ஜப்பான், ஆஸ்திரேலியா, வியட்நாம் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட  பிலிப்பைன்ஸ் முடிவெடுத்துள்ளது. முன்னதாக, இந்தியாவுடன் இணைந்து  பிலிப்பைன்ஸ் முதன்முறையாக தென்சீனக் கடலில் கூட்டுக் கடல் பயிற்சியை நடத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்திய ராணுவத்துடன்  கூட்டுப் பயிற்சிகள் நடத்த விரும்புவதாகவும் பிலிப்பைன்ஸ் தளபதி ஜெனரல் ரோமியோ ப்ராவ்னர் தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸ் மீனவர்களையும், பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பல்களையும்  வழக்கமாகத் துன்புறுத்தும் சீனக்கடற்படை ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் நடந்த இந்தப் போர் பயிற்சி சீனாவுக்கு இந்தியா கொடுத்த எச்சரிக்கை என்றே பார்க்கப் படுகிறது.

தனது பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் Akash-1S  ஏவுகணையை இந்தியாவிடமிருந்து வாங்க பிலிப்பைன்ஸ் ஆர்வம் காட்டியுள்ளது. ஏற்கெனவே, கப்பல்களைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இந்தியாவின் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை 375 மில்லியன் டாலர் மதிப்பில் கொள்முதலுக்கான ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ்  கையெழுத்திட்டுள்ளது.

இந்திய பசிபிக் பிராந்தியத்தில், அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டின் அடிப்படையில் உத்திசார் கூட்டாண்மையை இருநாடுகளும் ஏற்படுத்தியுள்ளன.

காலநிலை மாற்றம், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்க்க ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், சர்வதேச சூரிய சக்தி கூட்டணி மற்றும் உலகளாவிய தெற்கு உச்சிமாநாட்டின் குரல் போன்ற நடவடிக்கைகளில் இணைந்து செயல்படவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை வழங்குவதற்கான அடித்தளமாக இது அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: இந்தியா - பிலிப்பைன்ஸ்americausaChina is trembling with fear: Why is the Philippines joining hands with India?அஞ்சி நடுங்கும் சீனா
Share
Tweet
SendShare
Previous Post

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

Next Post

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies