தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!
Sep 14, 2026, 05:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 08:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக அரசு விதித்திருக்கும் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்கள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சரிந்து வரும் விற்பனையால் சிலை வடிவமைக்கும் தொழிலை விட்டே வெளியேற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளன.

விநாயகப் பெருமானின் தெய்வீகக் குணங்களைக் கொண்டாடும் விநாயகர் சதூர்த்தி ஆண்டுதோறும் தமிழக மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை இல்லங்களிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதும், மூன்று தினங்களுக்குப் பின்னர் அவற்றை எடுத்துச் சென்று தண்ணீரில் கரைப்பதும் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

இத்தகைய சிறப்புமிக்க விநாயக சதுர்த்தி பண்டிகை வரும் 27 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான சிலைகள் தயாரிக்கும் பணி திருச்சி மாவட்டம் திருவானைக்காவல், கொண்டையம்பட்டி பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளின் விற்பனை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகச் சிலை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

50 ரூபாயில் தொடங்கி 20 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. புதிய இடங்களில் சிலைகளை வைக்க அனுமதியில்லை, ஏற்கனவே வைத்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைத்து வழிபட வேண்டும், பெரிய அளவிலான சிலைகளை வைத்து வழிபடக்கூடாது எனக் கட்டுப்பாடுகளை ஆண்டுக்கு ஆண்டு அடுக்கிக் கொண்டே போவதாகத் தமிழக அரசின் மீது புகார் எழுந்துள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகளால் விநாயகர் சிலைகளை வாங்கி வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைவால் அதன் விற்பனையும் சரியத் தொடங்கியுள்ளது

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே சிலை தயாரிக்கும் பணியைத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் மத்தியில் சிலைகளை வாங்க போதுமான ஆர்வம் இல்லாத காரணத்தினால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருப்பதாகச் சிலை வடிவமைப்பாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு நஷ்டத்தைச் சந்திக்கும் சிலை வடிவமைப்பாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதோடு அவர்களுக்கு மானியம் வழங்கவும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags: Tamil Nadu government restrictions: Ganesha statue workers in painவேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்தமிழக அரசின் கட்டுப்பாடுகள்விநாயக சதுர்த்தி பண்டிகை
Share
Tweet
SendShare
Previous Post

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

Next Post

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies