ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் ஜார்ஜியாவை வீழ்த்தி ஸ்பெயின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
17ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் கெலோன் நகரில் நடந்த நாக்-அவுட் சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஸ்பெயின், ஜார்ஜியாவுடன் மோதியது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணி 4க்கு1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.