ஈரோட்டில் தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் கொல்லம்பாளையம் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது, இருசக்கர வாகனங்களை இயக்கும் போது தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், கார் உட்பட நான்குசக்கர வாகனங்களை இயக்கும் போது சீட்பெல்ட் அணிவது குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சாலை விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் விநியோகப்பட்டன.