குமரி மாவட்டத்தில், சாலையில் கிடக்கும் காலி தண்ணீர் பாட்டில்களில் குழாய் தண்ணீர் நிரப்பி மீண்டும் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அருமனை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடையில் மது அருந்த வரும் மதுபிரியர்கள், சாலையோரங்களில் நின்று மது அருந்துவிட்டு செல்கின்றனர்.
அவர்கள் வீசிச் செல்லும் காலித் தண்ணீர் பாட்டில்களை சிலர் சேகரித்து அதில் குழாய் தண்ணீரையோ, கிணற்று தண்ணீரையோ நிரப்பி அதனை மீண்டும் குடிமகன்களிடம் விற்பனை செய்கின்றனர்.
சுத்திகரிக்கப்படாத தண்ணீரை அருந்துவதால் பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், முதியவர் ஒருவர் காலித் தண்ணீர் பாட்டிகளில் தண்ணீர் நிரப்பி விற்பனைக்கு எடுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.