வயநாட்டில் தனது உரிமையாளரை கண்டவுடன் நாய் நடத்திய பாசப்போராட்டம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிப்பில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி வளர்ப்பு விலங்குகளும் மரணமடைந்தன.
சில வளர்ப்பு விலங்குகள் உயிர் தப்பிய நிலையில், சூரல்மலையில் கடந்த ஆறு தினங்களாக தனது உரிமையாளரை தேடி அலைந்த நாய் ஓன்று, அவரை கண்டவுடன் மகிழ்ச்சியில் பாசப் போராட்டம் நடத்தியுள்ளது.
கொஞ்சி குலாவிய நாய்க்கு முத்தம் கொடுத்த உரிமையாளர், அதனை தன்னுடன் அழைத்து சென்றுள்ளார்.