திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரி வீட்டின் பூட்டை 50 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.
அயப்பாக்கம் குமரன் தெருவில் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரி குணசேகரன் வசித்து வருகிறார். இந்நிலையில் குணசேகரன் தனது மகளை பார்ப்பதற்கு பெங்களூரு சென்றுள்ளனர்.
இதனை அறிந்த கொள்ளையர்கள் அவர் வீட்டிலிருந்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.