பாகிஸ்தானில் சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
பலுசிஸ்தான் மாகாணம், சுர்காப் சௌக் அருகே உள்ள சந்தையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ள நிலையில், சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.