நீட் தேர்வில் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் செயல்திறன் கடந்த ஆண்டை விட மேம்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட் ஆப் இந்த ஆண்டில் 140 மதிப்பெண்கள் வரை உயர்ந்துள்ளது.
அதன்படி, அருந்ததியர் பிரிவை சேர்ந்த மாணவர் 487 மதிப்பெண்கள் பெற்று மருத்துவ கல்லூரியில் கடைசி இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் கடைசி மருத்துவ படிப்பிற்கான இடத்தை பெற்ற மாணவர் 347 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பட்டியலின பிரிவில் கட் ஆப் மதிப்பெண் 440 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 93 மதிப்பெண்கள் அதிகமாகும். மேலும், 2021 மற்றும் 2022ல், பட்டியலின பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் முறையே 281 மற்றும் 249 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.