லண்டன் புறப்பட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வழியனுப்பி வைத்தனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் சான்றிதழ் படிப்புக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் புறப்பட்டார். மூன்று மாத படிப்புக்காக லண்டன் செல்லும் அண்ணாமலை நவம்பர் மாதம் இந்தியா திரும்புகிறார்.
இந்நிலையில், நள்ளிரவு சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலைக்கு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அண்ணாமலைக்கு பூங்கொத்து வழங்கியும், வாழ்த்து தெரிவித்தும் பாஜக நிர்வாகிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மூன்று மாதங்களும் லண்டனில் இருந்தவாறே ஆன்லைன் வாயிலாக அண்ணாமலை கட்சிப் பணிகளை கவனிப்பார் என பாஜக தலைமை அறிவித்துள்ள நிலையில், அவரது லண்டன் பயணம் வெற்றிபெற ‘அண்ணாமலை’ என்ற ஹேஷ்டாக்கை சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்ய பாஜக ஏற்பாடு செய்துள்ளது.