பா.ஜ.க. புதிய உறுப்பினர் சேர்ப்பு பணி செப்டம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது.
பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்ப்பு பணி 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படுகிறது. ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் உறுப்பினர் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பா.ஜ.க. புதிய உறுப்பினர் சேர்ப்பு பணி அடுத்த மாதம் செப்டம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது. இப்பணிக்கான தலைவராக பாரதிய ஜனதா தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே நியமிக்கப்பட்டுள்ளார்.