ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்ட மேலும் ஒரு பிணைக்கைதியை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக மீட்டது.
பாலஸ்தீனத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தாக்குதல் நடத்தியது.
இதில் ஆயிரத்து 200 பேர் கொல்லப்பட்டதுடன், 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்டனர்.
இதில் 113 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பிணைக் கைதிகளில் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்தது.
இந்நிலையில் கடத்திச் செல்லப்பட்ட பிணைக்கைதிகளில் மேலும் ஒருவரை தற்போது இஸ்ரேல் ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது.