அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை வெற்றியடைய செய்த மக்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையில், ஜன் தன் என்ற புதிய திட்டத்தை 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் அமலுக்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அதில், மக்களிடம் சேமிப்பு பழக்கத்தை கொண்டுவரவே ஜன் தன் திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் பெண்களும், இளைஞர்களும் அதிகளவில் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.