தேசிய அளவில் தொழிற்சாலைகளை மேம்படுத்துகிற திட்டத்தின் கீழ் 28,600 கோடி ரூபாய் அளவிலான, 12 புதிய தொழிற்சாலை நகரங்களை அமைப்பதற்கான திட்டதிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்,முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : நாட்டின் 10 மாநிலங்களை உள்ளடக்கிய இந்த திட்டத்தில், 6 முக்கியமான தொழில் நகரங்கள் உருவாக்குவதற்கான திட்டமிடப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் ஏற்றுமதி மூலம் 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பொருளாதாரம் ஈட்டுதல். – பணியாளர்கள், உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உறுதிபடுத்தப்பட்ட பாதுகாப்புத் தன்மையுடனான உள்கட்டமைப்பு வசதிகளுடன் இத்தொழிற்சாலைகள் அமையும்.
இதன் மூலம், நேரடியாக 10 லட்சம் வேலைவாய்ப்புகளும், மறைமுகமாக 30 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவுள்ளது என தெரிவித்துள்ளார்.